பல்!
அ திகாலை மணி 5.30 இருக்கும், என் செல் ·போன் சிணுங்கியது. அலாரமோ என எடுத்து பார்த்தேன். இல்லை அது ஒரு SMS. ஷார்ஜாவில் இருக்கும் என் தங்கையிடமிருந்து. "உன் மருமகனின் பல் ஆடுகிறது. அதை ஆடாமல் ஒட்டி வைக்கும் சாதனம் வாங்கி தா அம்மா என்கிறான். பல் ஒடியப்போகிறது என்று ஒரே அழுகையாய் அழுதவண்ணம் இருக்கிறான்" - என்றது SMS. அதை படித்ததும் என் தூக்கம் கலைந்தது. சிரிப்பு வந்தது, என் தங்கைக்கு போன் செய்தேன். "நான் அடுக்களைல வேலையா நின்னுட்டிருந்தேன்! அழுதிட்டே என் கிட்டே வந்தவன், என் மிடில் பல்லு ஆடுதும்மா! நான் ஒன்னுமே பண்ணல, அதுவா ஆடுது, ஒடியுமா மா? -ன்னு கேட்டு அழ ஆரம்பிச்சுட்டான். பல் ஒடியாம ஒட்டி வைக்கணும் நு அழுதிட்டிருந்தான். இப்போதான் தளர்ந்து போய் தூங்கிவிட்டான்." - என்றாள் என் தங்கை. நம் குழந்தை பருவத்தின் முதல் முக்கிய நிகழ்ச்சி இந்த பல் விழுதல் என்றே தோன்றுகிறது. நம்மில் பலருக்கும் நினைவு நிற்க துவங்கியபின் நடக்கும் முதல் நிகழ்வும் இதுவே! ஒரு பல் மெதுவாய் ஆட்டம் கொடுக்கும். பின் அதன் ஆட்டம் அதிகரிக்கும். பின் நாக்கு அந்த ஆடும் பல்லோடு விளையாடும். சில நேரம், பெரும்பா