போக்கிரி வண்டு!



வணக்கம்!

பசித்திருந்த ஒரு மதிய வேளையில் இசை கேட்டிருந்தது வண்டு!

"போக்கிரி" படத்தின் "டோலு டோலு தான் அடிக்கறா" என்ற பாடலை கேட்டுக் கொண்டிருந்த போது சாப்பாடு வாசம் எங்கிருந்தோ வந்து மூக்கினை தாக்க.. இந்த மெட்டுக்கு பொருந்துமாறு சில வரிகள் வந்து விழுந்தது...!
"வாசம் வாசமா வருகுதா - என்
சுவாசம் மொத்தமும் மணக்குதா
வயிறும் காஞ்சு தான் கிடக்குதா - கொஞ்சம்
கஞ்சி கேட்டு தான் துடிக்குதா?

சில வகைகள் மட்டும் தான் கிடைத்திடுமே வீட்டில்
பல வகையில் பண்டங்கள் கிடைக்குமிடம் ஹோட்டல்!

ஊத்தி அவிச்சது இட்லியா - அதை
பரப்பி சுட்டது தோசையா!
பொறித்து எடுப்பது பூரியா - அந்த
உருளை கிழங்கு Gas தொல்லை!

அடடா அடடா அட அடை இது தாண்டா!
குடுடா குடுடா நீ சுட சுட போண்டா!
இடுடா இடுடா வடை ரசத்தினில் இடுடா
ஊறி திளைக்கும் அது ரசவடை தாண்டா! "

இப்படி சில வரிகள் பல்லவிக்கு வந்து விழுந்த நிலையில் இந்த பாடலை முழுமையாக்க நினைத்த வண்டு எழுதிய சரணங்கள் கொஞ்சம் காதல் சில்மிஷத்துடன் அமைந்திட்டது.


சில்மிஷ சரணத்துடன் பசி பல்லவி ஒட்டவில்லை. பசியின் அவதியை விட காதல் சில்மிஷங்கள் சுகம் தானே? ஆகையால் அந்த சரணத்தோடு ஒட்டாமல் இருந்த இந்த பல்லவியை மாற்றி கொஞ்சம் காதல் சில்மிஷம் கொஞ்சம் அறிவுரை என்பது போல் இப்பாடலை வடிவமைத்தது வண்டு!

இனி பாடல்...!  (Please use headphones for clarity)




பல்லவி 1:
ஆ: [டாலு டாலு போல் இருக்கிறா..]
Doll-லு Doll-லு போல் இருக்குறா - புது
Feel-லு Feel-லு தான் கொடுக்குறா!
Sugar ஏற ஏறத்தான் சிரிக்கிறா - இந்த
பிகரு ஆளையே உருக்குறா!

பெ: இந்த பாவை பூவுடல் பூத்திருக்கும் சோலை!
அந்த பூவை வாடாது காத்திருக்கும் சேலை!

குழு: பூக்கள் வாசம் தான் சிறந்ததா - இந்த
பெண்கள் வாசம் தான் சிறந்ததா?
சகவாசம் இவளுடன் தோன்றினால்
சுகவாசம் கிடைத்திடக் கூடும்!

ஆ: அழகு அழகு இவள் அசைவது அழகு
பழகு பழகு நீ பரிவுடன் பழகு
இறகு இறகு மனம் மெல்லிய இறகு
இறங்கு இறங்கு நீ இதயத்தில் இறங்கு!

சரணம் 1:
பெ: பொழிந்திடும் மழையில் நனைந்திடும் பொழுதில்
சுட சுட தேநீர் சுகம் தானே!
கொதித்திடும் வெயிலில் வறண்டிடும் பொழுதில்
இளநீர் இதம் தானே!

ஆ: வியர்வையின் மழையில் விரல்களுக் கிடையில்
சிறு தொடல் சுகம் தானே!
கொதித்திடும் மனதில் தகித்திடும் உணர்வில்
இதழ் நீர் இதம் தானே!
பெ: நீ அனைத்தும் எடுக்க!
நான் அளந்து கொடுக்க!
முன்பு வழுகி விலக!
பின்பு பழகி பருக!
சரணம் 2:

ஆ: தாளிக்கும் வாசம் பரவிடும் போது
பசித்திடும் எண்ணம் வரும் போலே!
தாவணி பெண்ணை பார்க்கையில் காதற்
பசி அதை கண்டேனே!
பெ: உலையினில் அதிகம் இருந்திடும் சாதம்
குழைந்திடும் அது போலே!
நிலையினில் நில்லா திருந்திடும் பருவம்
பிழையென்று ஆகிடுமே!

விளைவு அறிந்து!
இடை வெளியில் பழகு!
நீ சமயம் அறிந்து!
தீ அணைத்துப் பழகு!

[இந்த பாவை பூவுடல் பூத்திருக்கும்....]


சில்வண்டு!
Nov 20, 2007

Comments

sathya said…
ayyioo vandu
unga kiita paaalal pala talent iiruku pollla
ungal parathiya en mudiyala vandu
mudhal kavuthai aparthen super
athutha kavithai atha vida super


appuram intha pattu

supero super




sakala kal vallavan poal itha vandu





romba perumaiya ioirukkkku
itha arumaiya na vandu
enn nanaban endru
Priya berk said…
great nice superb
no words 2 say vandu
really u were rocked
Thanks Sathya!

Vandu Happy!
Vandu Very Happy!
Vandu Very Very Happy :-)

வண்டின் தோழமை பெருமை என்றீர்! வண்டிற்கு இதை விட பெருமை ஏது? நன்றி தோழியே!
Thanks Priya!
Thanks for visiting my blog! Thanks for reading that song! and Thanks for writing a comment.

I think it is the tune of this song that actually rocks! [oh! what a humble vandu :-) ]
bkaseem said…
ஜில்லு.. வழக்கமா முதல் விமர்சனம் எனதாக இருக்கும். இங்கே என் முதல் நிலை விட்டுப்போச்சே! அட சில்லு... உன் பதில்களில் அதீத சந்தோஷம் தெரியுதே! நான் என்ன சொல்ல? நீ சொல்லி இருப்பது உண்மைதான். இந்த பாட்டின் மெட்டு உன் வரிகளை தூக்கி விடுகிறது. இந்த பாடலை இரசிப்பவர்களால் தான் உன் வரிகளையும் இரசிக்க முடியும்.

எல்லோரும் சொல்வது போல "Rock வண்டு Rock..."

மற்ற பாடல்களையும் போடு வண்டு!
எனது பதில்களில் சந்தோஷம் தெரிவது இருக்கட்டும் நண்பா! உன் பதிலில் கொஞ்சமே கொஞ்சம் பொறாமை தெரியுதே அது ஏன்?

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?