Posts

Showing posts from 2007

போக்கிரி வண்டு!

வணக்கம்! பசித்திருந்த ஒரு மதிய வேளையில் இசை கேட்டிருந்தது வண்டு! "போக்கிரி" படத்தின் "டோலு டோலு தான் அடிக்கறா" என்ற பாடலை கேட்டுக் கொண்டிருந்த போது சாப்பாடு வாசம் எங்கிருந்தோ வந்து மூக்கினை தாக்க.. இந்த மெட்டுக்கு பொருந்துமாறு சில வரிகள் வந்து விழுந்தது...! "வாசம் வாசமா வருகுதா - என் சுவாசம் மொத்தமும் மணக்குதா வயிறும் காஞ்சு தான் கிடக்குதா - கொஞ்சம் கஞ்சி கேட்டு தான் துடிக்குதா? சில வகைகள் மட்டும் தான் கிடைத்திடுமே வீட்டில் பல வகையில் பண்டங்கள் கிடைக்குமிடம் ஹோட்டல்! ஊத்தி அவிச்சது இட்லியா - அதை பரப்பி சுட்டது தோசையா! பொறித்து எடுப்பது பூரியா - அந்த உருளை கிழங்கு Gas தொல்லை! அடடா அடடா அட அடை இது தாண்டா! குடுடா குடுடா நீ சுட சுட போண்டா! இடுடா இடுடா வடை ரசத்தினில் இடுடா ஊறி திளைக்கும் அது ரசவடை தாண்டா! " இப்படி சில வரிகள் பல்லவிக்கு வந்து விழுந்த நிலையில் இந்த பாடலை முழுமையாக்க நினைத்த வண்டு எழுதிய சரணங்கள் கொஞ்சம் காதல் சில்மிஷத்துடன் அமைந்திட்டது. சில்மிஷ சரணத்துடன் பசி பல்லவி ஒட்டவில்லை. பசியின் அவதியை விட காதல் சில்மிஷங்கள் சுகம்

Not Interested in Movies - னு சொன்னா?

"Not Interested in Movies" என்பது சிலரின் கூற்று! அதில் அர்த்தம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. திரைப்படங்களை மிகவும் விரும்பும் இந்த வண்டு என்பதால். திரைப்படங்கள் சார்பாக வாதாட பீஸ் இல்லாத வக்கீலாக ஆஜர் ஆகுகிறது வண்டு. ஏதொரு விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணம் உண்டு. அந்த காரணம் அறியாமல் உண்டாகும் விருப்பும் வெறுப்பும் அர்த்தமற்றது. [ பின்னுகிறேனா? ]. Not Interested in Movies என்று கூறுவது நான் சராசரிக்கும் ஒரு படி மேல் என்று காட்டிடத்தானோ? [ மிளகாய் பொடி தூவி சிலரின் கோவத்தை கிளறுகிறேனா? ]. சரி, ஏன் Not Interested என்று கேட்டால் அதற்கும் பதில் கூற சிலரால் முடிவதில்லை [ சே.. சே.. யாரையும் நான் குத்தி காட்டலேங்க...!] திரைப்படத்தை விடுங்கள் அந்த திரையிலேயே ஒரு மாபெரும் செய்தி அடங்கியுள்ளது. நல்லதாயினும், கெட்டதாயினும், காட்டப்படுவது எதுவாயினும் திரை தன் நிலை மாறுவது இல்லை. அது அதுவாகவே இருக்கிறது. [ இதுல என்ன சேதினு கேக்காதீங்க... ஒரு விஷயத்தை சொன்ன அனுபவிங்க.. ஆராயாதீங்க! ] திரைப்படங்கள் மனிதனை அல்ல மனங்களை படம் பிடிப்பவை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனை பொருத்தவரையில் ஒரு சரி உண

!!!DREAM GIRL!!!

என் DREAM GIRL!!! யார் அவள்? எப்படி இருப்பாள்? பேரழகு இல்லை அவள் களை மிகுந்த முகத்தவள் மஞ்சள் அழகியல்ல மா நிறத்தில் ஜொலிப்பவள்! இடி மழை மின்னலுக்கு கரப்பான் பூச்சிக்கு பயந்தலறும் பெண் ஆவாள்! எதிர்பாரா நேரத்தில் மாபெரும் பிரச்சினையில் தைரியம் காட்டி அசரவும் வைப்பாள்! என் சின்ன கொஞ்சல் மொழிக்கு கூட வெட்கம் தாளாது துவளும் பெண்! சில நேரத்தில் கொஞ்சலில் கெஞ்சலில் என்னையும் மிஞ்சும் பெண்! "என்னமோ தெரியல அழுகைய வருது" - என என் மார்பில் சாய்ந்து குழந்தை போல் அழுவாள்! நான் தளர்ந்து போனேன் என்றால் - என் கை பற்றி கண் நோக்கி அணைத்தெனக்கு ஆறுதல் தருவாள்! காரணம் இன்றி கோபிப்பாள் - பின் மன்னிக்கவேண்டி பின்னே அலைவாள்! கோபிப்பது நான் என்றானால் சமரசம் கொள்ள சம்மதிக்காதிருப்பாள்! அவள் அமைதியானவள்! - பத்து வாயில் பேசும் வாயாடியும் அவள்! இசையில் லயிப்பவள் என் உள்ளத்தில் இசையாய் இருப்பவள்! சாந்த சொரூபி படபடக்கும் பத்திரகாளி! ரசிகை ராட்க்ஷசி! தேவதை தாரகை குயில் மயில் - என் குட்டி குரங்கு செல்லக் கழுதை என எல்லாமும் ஆனவள்! ஒவ்வொரு செய்கையிலும் அன்பை பொழிபவள்! ஸ்நேகம் ஸ்நேகம் ஸ்நேகம் எனை ஸ்நேகத்தில் க

சுதந்திர நன்நாள்!

அ றுபது ஆண்டு ஆயிற்று . நாம் சுதந்திரம் பெற்று . சுதந்திர நன்நாளில் எத்தனை பேர் உணர்வுபூர்வமாக வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம்? விடுமுறை நாள் என்பதையும் தாண்டி எந்த விதத்தில் இந்த நாள் நம்மில் ஓர் தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கிறது? இவை யாவும் சிந்தனைக்குறிய கேள்விகளே! அறுபது ஆண்டு சுதந்திர பாரதத்தில் மக்களின் இன்றைய நிலை என்ன? நாட்டின் நிலையும் தான் என்ன? அறுபதாண்டுகளாய் அழித்துக்கொண்டிருக்கிறோம் வறுமைக்கோடு இன்னும் அழிந்தபாடில்லை. அறுபதாண்டுகளாய் நாமே நம்மை ஆண்டுகொண்டிருக்கிறோம், உணவு, உடை, இருப்பிடம் எனும் அடிப்படை கூட அனைவருக்கும் கிட்டியபாடில்லை. கல்வியில், மருத்துவ வசதிகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமநிலை என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. சீனியர் சிட்டிசன் என அறியப்படும் முதியோருக்கு போதிய பாதுகாப்பு? என்பதில் அக்கறையும் அறவே இல்லை! நம்மை நாமே ஆளும்போதும் ஏன் இன்னும் அவல நிலை? இதற்க்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? மக்களா? ஆட்சியாளர்களா? சிந்திக்கையில் அனைவரும் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஓட்டு, ஆட்சி, பதவி என்று ஆதாயம் எதையும் எதிர்பாராமல் நாடு, அதன் நலன், அடுத்த தலை

ஒட்டுவதே ஒட்டும்!

க ண் கண்டதும் மதி சொன்னதும் மனம் உணர்ந்ததும் - பொய்! கண் திரண்டதும் மனம் உடைந்ததும் நான் நொந்ததும் - மெய்! ---- 0 ---- சரி என்றே எண்ணி வந்தேன் சிலர் குறித்த புரிதல் தனை! அது சரி அல்ல என்றே அவர் கரி பூசிச் சென்றிட்டார்! எவர் எனக்கு அருமை என்று இருமாப்பு கொண்டேனோ? அவரே என் பெருமை மீது சேற்றினை இறைத்திட்டார்! --- 0 --- எல்லை உண்டென்று அறியாத பாவம் தொல்லை கொடுத்து விட்டேன்! உரிமை எடுத்து கண்டிக்கத் தான் சில சொல்லை உதிர்த்து விட்டேன்! உதிர்த்த சொல் சுட்டதென்றா இவர்கள் ஊமை என்றானார்கள்? - ஆயின் உண்மையை உரைக்கட்டும் எந்தச் சொல் சுட்டதென்று? ---- 0 ---- இடைவெளி கூடுதென்று இதயம் பதறியதால் அபயக் குரல் கொடுத்து - உறவை காத்திடத்தான் எத்தனித்தேன்! அதுவே தவறென்று ஆகிவிட்டால் என் செய்வேன்? இச்செயலே பிரிவுக்கு உரமாச்சோ? - துயர் கொண்டேன்! --- 0 --- அங்கங்கு காலம் ஓர் அடையாளம் காட்டும்! அறிகுறிகள் அறிந்து - நாம் தயாராக வேண்டும்! அன்றேல், எதிர்பாரா ஏமாற்றம் நமை வந்து சூழும் - அதில் பழங்கால இன்பமும் பழுதாகிப் போகும்! --- 0 --- அளவாய் எடுத்தும் அளவுக்குள் கொடுத்தும் பழகுதல் நன்று! தேவைக்கு மேல் என்றால் ஏது

பல்!

அ திகாலை மணி 5.30 இருக்கும், என் செல் ·போன் சிணுங்கியது. அலாரமோ என எடுத்து பார்த்தேன். இல்லை அது ஒரு SMS. ஷார்ஜாவில் இருக்கும் என் தங்கையிடமிருந்து. "உன் மருமகனின் பல் ஆடுகிறது. அதை ஆடாமல் ஒட்டி வைக்கும் சாதனம் வாங்கி தா அம்மா என்கிறான். பல் ஒடியப்போகிறது என்று ஒரே அழுகையாய் அழுதவண்ணம் இருக்கிறான்" - என்றது SMS. அதை படித்ததும் என் தூக்கம் கலைந்தது. சிரிப்பு வந்தது, என் தங்கைக்கு போன் செய்தேன். "நான் அடுக்களைல வேலையா நின்னுட்டிருந்தேன்! அழுதிட்டே என் கிட்டே வந்தவன், என் மிடில் பல்லு ஆடுதும்மா! நான் ஒன்னுமே பண்ணல, அதுவா ஆடுது, ஒடியுமா மா? -ன்னு கேட்டு அழ ஆரம்பிச்சுட்டான். பல் ஒடியாம ஒட்டி வைக்கணும் நு அழுதிட்டிருந்தான். இப்போதான் தளர்ந்து போய் தூங்கிவிட்டான்." - என்றாள் என் தங்கை. நம் குழந்தை பருவத்தின் முதல் முக்கிய நிகழ்ச்சி இந்த பல் விழுதல் என்றே தோன்றுகிறது. நம்மில் பலருக்கும் நினைவு நிற்க துவங்கியபின் நடக்கும் முதல் நிகழ்வும் இதுவே! ஒரு பல் மெதுவாய் ஆட்டம் கொடுக்கும். பின் அதன் ஆட்டம் அதிகரிக்கும். பின் நாக்கு அந்த ஆடும் பல்லோடு விளையாடும். சில நேரம், பெரும்பா

சிறகில் பொதிந்து!

தி டீரென இருண்டது மேகம். அந்த இருளை கிழித்து பளீரென பிறந்தது கண்ணை குருடாக்கும் விதம் ஒரு மின்னல் கீற்று. மின்னல் உண்டாக்கிய மிரட்சியை கூட்டியது செவியை செவிடாக்கும் அளவுக்கு குலை நடுங்கவைக்கும் இடியோசை. மனதை பிடித்தாட்டுகிறது ஒரு பயம். அழத்துவங்கினேன்! அறை கதவைத் திறந்து அம்மா வந்தாள். என் அருகே வந்தவள் என் தலையை வருடி "பயந்திட்டியாப்பா?" என்றாள். நான் பதில் ஏதும் கூறவில்லை, அவள் கரத்தை இறுக பற்றிக்கொண்டேன். என்னை எடுத்து அவள் தோளில் இட்டுக்கொண்டாள். ஆதரவாய் என் முதுகில் தட்டிக்கொண்டே அவள் அறைக்கு என்னை எடுத்துச் சென்றாள். அங்கே அப்பா என்னை பார்த்து சிரித்தார். "ஆண்பிள்ளையே.. பயந்திட்டியா?" - என்றார். அவர் தன் நெஞ்சோடு என் தங்கையை அணைத்து பிடித்திருந்தார். அவர் அருகே சென்றதும் என்னை உச்சி முகர்ந்து, "இதற்க்கெல்லாம் பயப்படலாமோ ஆண் பிள்ளை? உன் தங்கையின் பயத்தையும் போக்கவேண்டிய அண்ணன்காரன் நீ. நீயே பயந்தால் எப்படி?" - என்றார். அம்மா என்னை அவள் அருகில் படுக்க வைத்தாள். அவளின் ஒரு கை என்னை அணைத்திருக்க, அப்பாவின் ஒரு கை என் தலையை வருடி இருக்க, ஓர் அண்ணனாக என

ஆடிய ஆட்டமென்ன?

ச மாதானம் கொள்வோம்! யானைக்கும் அடி சறுக்கும்! நம் யானைக்கோ அடிக்கு ஒரு முறை சறுக்குகிறது. நம்பிக்கை கொள்வோம்! பெர்முடா பங்களாதேஷை தோற்கடித்து நம்மை சூப்பர் 8 க்கு அனுப்பும் என்று நம்பிக்கை கொள்வோம்! அப்படி மட்டும் நடந்துவிட்டால் பெர்முடாவின் அந்த குண்டு ஆட்டக்காரரை சச்சினை விட அதிகமாக நேசிப்போம் என உறுதி கொள்வோம்! ஆதங்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தோல்வி நல்லதுக்கே என்றே எண்ணத்தோன்றுகிறது. "அளவு" கடந்த விஷயங்கள் என்றைக்கும் அபாயகரமானது. கிரிகெட் சம்மந்தப்பட்ட எல்லா விஷயங்களும் அளவு கடந்து தான் போய்க்கொண்டிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. இந்த தோல்வி அனைத்தையும் சரிகட்டி எல்லாவற்றையும் அளவுக்குள் கொண்டுவரும். கிரிக்கெட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு விளம்பரத்திலும் மற்று பலதிலும் பணம் முதலீடு செய்யும் பல கம்பெனிகளுக்கு இது ஒரு பாடம். தறி கெட்டு வெறியோடு இந்த விளையாட்டை அனுகும் ரசிகர்களுக்கும் இந்த தோல்வி தேவையான ஒன்றுதான். ஒரு விதத்தில் இந்த தோல்விக்கு காரணமே இத்தகைய ரசிகர்கள் தான் என்பதும் உண்மையே! நன் அணியின் எதிர்காலத்துக்கு இந்த தோல்வி நன்மையே செய்யும். "திறமைக்கு

மாயக்கண்ணாடி -- என் பாட்டு!

மாயக்கண்ணாடி! பாடல் கேட்க நேர்ந்தது! அதில் சினிமா நடிகன் ஆகும் கனவுடன் சலூனில் வேலை பார்க்கும் நாயகன் சேரன். ஒரு கஸ்டமரிடம் தன் ஆசையை சொல்ல அவர் சேரனிடம் அடுத்த நாள் AVM க்கு வரும் படி கூறிச்செல்ல, அந்த இடத்தில் தான் ஒரு நடிகன் ஆகிவிட்டது போல கற்பனை செய்து பாடுவது போல ஒரு பாடல் இடம் பெறுகிறது. "ஏலேய்! எங்க வந்தே? வா வா எப்ப வந்த? சினிமாவுல சேரப்போறியா? கட்டிப்புடிச்சு காதல் டூயட் பாடப்போறியா? வெற்றிக்கொடி நாட்டப் போறியா?" - என்றெல்லாம் சினிமா உலகம் அந்த நாயகனை பார்த்து பாடுவது போல இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இதே சிச்சுவேஷனுக்கு, சினிமா உலகம் அந்த நாயகனை பார்த்து பாடுவது போல் அல்லாமல் அந்த நாயகனின் எண்ண ஓட்டத்தில், நடிகன் ஆகப்போகிறோம் எனும் தருணத்தில், அவன் மனதில் விரியும் கற்பனைகள் வாயிலாக பாடல் எழுதினால் எப்படி இருக்கும் என சிந்தித்தேன்! அதன் விளைவே இப்பாடல். இப்பாடலுக்கு யாரேனும் இசை அமைத்தால், அதை எனக்கு பாடிக்காட்டவும். என் வரிகளை பாடலாய் கேட்பதில் பெரு மகிழ்வு கொள்வேன்! பல்லவி ======= தவமாய் தவமிருந்து நான் கேட்ட வரங்கள் நாளை கிடைக்குதே! கனவு கண்டிருந்தேன் நாளைக்கு அவைக

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

[மரத்தடி தமிழ் குழுமத்தில் மஹாபாரத கதாபாத்திரங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்ற கர்ணன் மற்றும் துரியோதன சகோதரர்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டது.] சி றுவயதில் கார்டூன் புத்தகங்கள் வழியாகத்தான் மஹாபாரதம் எனக்கு பரிச்சியமானது. பிறகு அப்பா ஒரு கோடை விடுமுறையின் போது படித்துகாட்டியதிலும், அறிஞர் பெருமக்களின் கருத்துகளிலிருந்தும், தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பார்த்தவரை தொலைக்காட்சி தொடரிலிருந்தும் மஹாபாரதத்தை ஓரளவு தெரிந்துகொண்டேன். எனக்கும் கர்ணண் மீதுதான் பிடித்தம் அதிகம். கர்ணண் படமும் இதற்க்கு ஒரு காரணம். ஆனால் நான் அந்த படம் பார்த்ததில்லை. பிறெகெப்படி இந்தப்படம் காரணம் ஆனது என்று கேட்பீர்களேயானால், காரணம் அந்த பாடல். சீர்காழி அவர்களின் குரலில் வரும் "உள்ளத்தில் நல்ல உள்ளம்" எனும் பாடல் தான் கர்ணணைப்பற்றி யோசிக்கவைத்து என்னை உருக வைத்தது. இப்போதும் அந்த பாடலை கேட்கையில் சிலநேரம் கண்ணீர் பெருகுவது உண்மை. மரத்தடியில் நாம் இப்போது மஹாபாரத கதாபாத்திரங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மஹாபாரதம் பற்றி என் மனதில் படிந்துபோன கருத்துக்களை, சில ஐயப்பாடுகளை உங்கள் முன் வைப்பத