Posts

Showing posts from September, 2009

வானவில் பூக்கள்! [ஒரு ஆரிய பூ!]

Image
" ந யே ஆயே ஹோ?" எனக்கு நான் மட்டுமே துணையாய், வகுப்பறையில் என் இடத்தில் தனியே அமர்ந்து ஜன்னல் வழியே வெளியே எங்கோ எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஒரு இண்ட்டர்வல் சமயத்தில் என் செவியில் விழுந்த ஹிந்தித்தேனைச் சிந்தியது யார் என அதிர்ந்து திரும்ப, அங்கே என் அருகே பூத்திருந்தது ஆரிய பூ ஒன்று! "புதுசா?" என்று தான் அவள் கேட்டிருக்கவேண்டும் என ஊகித்து "ஆம்" என்ற பதிலாய்த் தலையாட்டினேன் திராவிடப் பணிவுடன். "மதறாஸ் கே ஹோ?" -- மீண்டும் தூற்றினாள் தேனினைச் செவியினில்! ஆம் என்பதை இலகுவாய் "ஹாம்!" என்றேன். என் பதில் ஹிந்தியாய் மாறி அவளைச் சென்றடைந்த வேளையில் மனம் " இவள் யாராக இருக்கக்கூடும்?" என்பதை அகழ்வாராய்ச்சி செய்யத்துவங்கியது. அவளோ அகழ்வாராய்ச்சியில் என்னை மூழ்கவிடாமல் அடுத்த தேனினைச் சுரந்தாள் என் மீது தெளிக்க! "மதறாஸ் மேம் கிதற் கே ஹோ? டமிள்நாடு யா பிர் கேரள்?" -- தெளித்திட்டாள் அவள் சுரந்திட்ட தேனினை! ஹிந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் என்பதால், நான் தமிழ் பாதி, கேரளம் பாதி எனும் கதையெல்லாம் கதைக்

வானவில் பூக்கள் [ மொட்டுமலர்கள்! ]!

வா னவில் பூக்களை அறிமுகப்படுத்துகிறேன்! என் வாழ்க்கை பயணத்தில் ஆங்காங்கே பூத்து மணம் பரப்பிய இப்பூக்களை, மீண்டும் கொஞ்சம் முகர்ந்து பார்க்க, என் நந்தவனத்துக்குள் மீண்டும் ஒரு உலா போகப்போகிறேன். பலமுறை நான் தனிமை உலா நடத்தியிருந்தாலும் இம்முறை உங்களையும் என்னோடு அழைத்துச்செல்வதில் ஆனந்தம் கொள்கிறேன். வாழ்க்கைப் பாதையில் இதுவரை உள்ள பயணத்தில் ஆங்காங்கே சில பூக்கள் என் வாழ்வை வசந்தமாக்கியிருந்தன. வலி உண்டாக்காத பூக்கள் இவை, காயம் தந்ததில்லை, வேதனை தரவில்லை, இதயத்தினை சற்றே தீண்டிச்சென்ற தென்றல் பூக்கள் இவை! வானவில் போல் திடீரெனத் தோன்றி, அழகினை இரசிக்கவைத்து, இரசித்து முடிக்கும் முன்னமே மறைந்து போனதாலும், சில பூக்களை நானும் பின்னர் மறந்து போனதாலும் தான் இப்பூக்கள் வானவில் பூக்கள்! வண்டின் தோள் ஏறி வாருங்கள். அங்கே என் வானவில் பூக்கள் உங்களை வரவேற்றிட காத்திருக்கின்றது. ~~~ 0 ~~~ ம னக்கிடங்கை திறந்து, நினைவுக் கடலில் குதித்து மூச்சடக்கி முடிந்த வரையில் அடி ஆழம் வரை செய்திட்ட பயணத்தில் கிடைத்த முதல் முத்துப்பூ, ரோஜா நிற சட்டையும், பச்சை நிற பாவாடையும் அணிந்த என் முதல் வகுப்பு தோழிப்பூ! அவள்