மாயக்கண்ணாடி -- என் பாட்டு!

மாயக்கண்ணாடி! பாடல் கேட்க நேர்ந்தது! அதில் சினிமா நடிகன் ஆகும் கனவுடன் சலூனில் வேலை பார்க்கும் நாயகன் சேரன். ஒரு கஸ்டமரிடம் தன் ஆசையை சொல்ல அவர் சேரனிடம் அடுத்த நாள் AVM க்கு வரும் படி கூறிச்செல்ல, அந்த இடத்தில் தான் ஒரு நடிகன் ஆகிவிட்டது போல கற்பனை செய்து பாடுவது போல ஒரு பாடல் இடம் பெறுகிறது.

"ஏலேய்! எங்க வந்தே?
வா வா எப்ப வந்த?

சினிமாவுல சேரப்போறியா?
கட்டிப்புடிச்சு
காதல் டூயட் பாடப்போறியா?
வெற்றிக்கொடி நாட்டப் போறியா?"

- என்றெல்லாம் சினிமா உலகம் அந்த நாயகனை பார்த்து பாடுவது போல இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

இதே சிச்சுவேஷனுக்கு, சினிமா உலகம் அந்த நாயகனை பார்த்து பாடுவது போல் அல்லாமல் அந்த நாயகனின் எண்ண ஓட்டத்தில், நடிகன் ஆகப்போகிறோம் எனும் தருணத்தில், அவன் மனதில் விரியும் கற்பனைகள் வாயிலாக பாடல் எழுதினால் எப்படி இருக்கும் என சிந்தித்தேன்! அதன் விளைவே இப்பாடல்.

இப்பாடலுக்கு யாரேனும் இசை அமைத்தால், அதை எனக்கு பாடிக்காட்டவும். என் வரிகளை பாடலாய் கேட்பதில் பெரு மகிழ்வு கொள்வேன்!


பல்லவி
=======

தவமாய் தவமிருந்து
நான் கேட்ட
வரங்கள் நாளை கிடைக்குதே!

கனவு கண்டிருந்தேன்
நாளைக்கு
அவைகள் யாவும் பலிக்குதே!

நாளை முதல் என் காலம்
பொற்காலம் ஆகுதே!

கலைமகளின் நல் ஆசி!
எனை வந்து சேருதே!

என் யோகம் என் காதில் வந்து
ரகசியங்கள் சொல்லுதே!

திரைவானில் புதிதாக ஓர்
நட்சத்திரமும் உதிக்குதே!

(தவமாய் தவமிருந்து)


சரணம் 1:
---------------

மவுண்ட்ரோடில் கட் அவுட்டுகள்
என் உருவம் சுமக்கின்றது!

பத்திரிகை அட்டைப்படம்
என் முகமே சிரிக்கின்றது!

வாரம் தோறும் எனைப்பற்றி
புது புதுதாய் கிசு கிசுக்கள்!

எங்கு நோக்கினும் எனைப்பற்றி
பல விதமாய் விமர்சனங்கள்!

எங்கே நான் செல்கின்ற போதும்
எனைத் தொடரும் ஒரு கூட்டம்!

ஆர்வத்துடன் எனை நெருங்கி..
எடுக்கும் என்னுடன் போட்டோகிரப்!
கேட்கும் என்னிடம் ஆட்டோகிராப்!

(தவமாய் தவமிருந்து)

சரணம் 2:
----------------

பேர் வருது! பணம் வருது!
குவிக்க குவிக்க பல விருது!

தலைமுறைகள் தாண்டிச்சென்றும்
குறையாத புகழ் எனது!

நான் தொட்டால் பொன்னாகுமென்று
எனை வைத்து விளம்பரங்கள்!

நான் சொல்லும் ஓர் வார்த்தை கேட்டு
பலர் செய்வார் நற்பனிகள்!

மழலை முதல் முதுமை வரை
அனைவர் அன்பும் பெற்றிருக்க!

அலுக்காமல் சளைக்காமல்....
எடுப்பேன் பலருடன் போட்டோகிரப்!
கொடுப்பேன் பலருக்கு ஆட்டோகிரப்!

(தவமாய் தவமிருந்து)


Comments

bkaseem said…
ஜில்லு,

பாட்டை எப்பவுமே பாடி கேட்டா தான் சுகம். படிக்கறச்சே நன்னா இருக்காது. இந்த பாட்டுக்கு நான் டியூன் போட்டு தற்றேன்! பதிலுக்கு உன் வாசகிகளுக்கு என்னை நீ அறிமுகப்படுத்தி வைப்பியா?

நண்பன்.

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?