Posts

Showing posts from February, 2009

ஆஸ்கர் வாங்கினேன்!

" I come from a country and a civilization that given the universal word. That word is preceded by silence, followed by more silence. That word is 'Ohm.' So I dedicate this award to my country." - Sound Mixing காக ஆஸ்கர் வாங்கிய ரெசூல் பூக்குட்டி யின் ஏற்புரை இது. ஒலி தொடர்பான தொழிலில் ஒலியின் ஆதாரமான " ஓம் " எனும் ஓங்காரத்தை இவர் குறிப்பிட்டு பேசியது மிகப்பொருத்தம். "ஓம்" என்பது ஒரு எழுத்து, இது அ, உ, ம எனும் ஒலிகளை உள்ளடக்கியது. சூரியன், சந்திரன், அக்னி எனும் ஒளி வடிவங்களும் இதனுள் அடங்கும். ஓம் எனும் பிரணவத்திலிருந்தே எல்லா ஒலி, ஒளி வடிவங்களும் உண்டாயின. ஓங்காரம் எனும் பிரணவத்தினை, உலகினை தன்னுள் அடக்கிய, அமைதியாலும் பேரமைதியாலும் சூழப்பட்ட ஒலியினை, உலகுக்கு வழங்கிய நாட்டிலிருந்து, நாகரீகத்திலிருந்து வந்திருப்பவன் என்று தன்னை அறிமுகப்படுத்திய விதம் கண்டு ஓர் இந்தியனாய் பெருமிதம் கொள்கிறேன். "ஓம்" - என்பது ஒலியின் ஆதாரம் என்பதனையும் தாண்டி அது இந்து சமயத்தின் புனித குறியீடு. உலக அரங்கில் அப்புனித ஒலியை உலகுக்கு அளித்த சமுதாயத்திலிருந்