சாதனை வண்டு!!

====================================================

வா சாமன்கள் வாங்க இண்டியன் ஸ்டோருக்கு போனேன்.

ரம்ஜான் ஸ்பெஷல் என்று நாலாபுறமும் கவர்ந்திழுக்கும் சாதனங்களை இறைத்து வைத்திருந்தார்கள்.

ஒரு பக்கம் குலோப்ஜாமுன் கொஞ்சிக் குழாவுது. மறுபக்கம் காஜூ கட்லி ஆளைக்கவ்வுது. ஜிலேபி டப்பா ஹேவ் மீ பேபி.. ப்ளீஸ்…!” என்குது. அருகிலிருக்கும் லட்டுவோ லவ் டார்ச்சர் கொடுக்குது
இது போறாதுன்னு,ரா.. ரா.. சரசுக்கு ரா.. ரா...என்று பாடி அழைக்குது ரசகுல்லா


மனதை கல்லாக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தால், எதிரே விதவிதமான 🍦 ஐஸ்கிரீம், "ஓம் க்ரீம்...க்ளீம்" என மந்திரம் போட்டு என்னை மயக்கப்பாக்குது
விலகி ஓடினேன்
மசாலா கடலை கையை பிடித்து இழுக்க, வாழைக்காய் சிப்ஸ் கிஸ் கேட்டு துரத்த, ஓமப்பொடி மோகப்பார்வை வீச, மிச்சர் ரப்சர் பண்ண, மீண்டும் விலகி ஓடி ஓரிடத்தில் ஒதுங்கி கண்கள் மூடி மூச்சு வாங்கும்போது ஏதோ ஒன்று என்னைத் தொடுவதாய் உணர்ந்து கண் திறந்து பார்த்தால்...,

கண்ணடித்து 👄 உதடு சுழித்து கவர்ச்சியாய் நிற்கும் கச்சோரி, "வா! சேந்து பண்ணுவோம் கச்சேரி..!" என்கிறது ஹஸ்க்கி வாய்ஸ் கொண்டு
Kachori!!!
அதிர்ந்து திரும்பினால் நெஞ்சில் இடித்து என்னை முக்கோணமாக்கி தடுத்து நிறுத்திய சமோஸா, தன் கூர் முனையால் என் இதயத்தைக் குத்தி
"கொத்திக்கோ என்னை ராசா, உனக்குள்ளே போவேன் நைசா, வெளிப்படுவேன் பிறகு Gas-ஆ!!" என்று டி. ராஜேந்தர் ரேஞ்சுக்குப் பேசுது.

சோன்பாப்டி, "வா இப்படி" என என்னை நோக்கி கட்டளை பிறப்பிக்க, அந்தக் கட்டளையை மீறி கடலை பர்ஃபியைத் தாண்டி, அல்வாவுக்கே அல்வா கொடுத்திட்டு, பால்கோவாவை பாக்காமல், போண்டாவைத் தீண்டாமல், "பக்கடோ!! பக்கடோ!!" என என் மேல் பாயும் தோட்டாவாக பாய்ந்து வந்த பக்கோடாவின் பிடியிலிருந்து பக்குவமாய் விலகி…,

பில் போடும் குஜராத்தி மங்கை குசும் பட்டேலைக் கூட குசலம் விசாரிக்காமல் துர்வாச முனிவரைப்போல முற்றும் துறக்காவிட்டாலும் முடிந்தவரை துறந்துவிட்டு கடையை விட்டு வெளிவருகையில் ஏதோ ஒரு வெற்றிக்களிப்பு, எதையோ சாதித்த ஆத்மதிருப்தி!

முப்பது நாள் விரதம் தந்த பக்குவமோ? சக்தியோ
எதுவாயினும் இது ஒரு சாதனைதான்!!!

 ==================================================================================
June 16, 2018.
sillvandu@gmail.com                                                                               Visit: http://sillvandu.blogspot.com
=========================================================================

Comments

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?