மன்னிப்பீரா தோணியாரே?


"மொத மேட்ச் வங்காளதேசம் கூடவா? போன தடவ நம்மள வீட்டுக்கு அனுப்பி வச்சானுவோ! இப்ப என்னத்த பண்ணப்போறானுவளோ என்ன எழவோ?"

-- நம்பிக்கையில்லாமல் பேசினான் இரசிகன்.


வங்கத்தை வென்றது பாரதம். அடுத்து இங்கிலாந்து!


"ஆஷஷ் (Ashes) ல ஆஸ்திரேலியாவுக்கே தண்ணிய காட்டிட்டு வந்திருக்கானுவோ... இன்னைக்கு வெளுக்கும், நம்ம ஆட்களோட நீலச்சாயம்!"

-- கொக்கரித்தான் இரசிகன்.


ஆட்டம் சம நிலையைக் (Tie) கண்டது!


"சொன்னோம்லா... இங்கிலாந்து காரன் கடைசில ரிஸ்க் எடுக்காம ஒரு ரன் போதும்னு நிறுத்தினதுனால பொழச்சது இந்தியா. இல்லாட்டி தோத்திருப்பாணுவோ... ஆட்டம் tie ஆனது இங்கிலாந்துகாரன் போட்ட பிச்சை! பெரிய டீமுன்னு சொல்லுவானுவோ... 29 ரன்னுக்கு எல்லா விக்கட்டையும் கொடுத்திட்டு வந்து நிப்பானுவோ.... இதுதான் பவர்பிளே ல இவனுங்க கிழிச்சது...!"

-- அட்டகசித்தான் இரசிகன்.


அடுத்து அயர்லாந்தும், நெதர்லாண்டும்..! எதிர்பார்த்ததுபோல அப்படியொன்றும் அனாயாசமாக ஜெயித்திடவில்லை பாரதம், கண்ட ஜெயத்தில் ஆங்காங்கே கொஞ்சம் திணறல் தென்படத்தான் செய்திட்டது.


"அவ்வளவுதாம்லே....! இந்த சின்ன சின்ன டீம் கிட்டேயே எப்படி தெனறுனானுவோன்னு பாத்தோம்லா... கோப்பையாவது ஆப்பையாவது.. சும்மா ஆசய வளத்திட்டு அவதிப்படாதீங்கலே.... இவனுவள நம்பி கனவுகூட காணக்கூடாது!"

-- எகத்தாளமாகப் பேசினான் இரசிகன்.


அடுத்ததாக,

தென் ஆப்பிரிக்காவோடு வெற்றி நிலையிலிருந்து வலியத்தாவி தோல்விநிலை கண்டது பாரத அணி!


இரசிகன் பலம் பெற்றான். ஆணவத்தோடு ஆரவாரம் செய்கலானான். "என்ன ஆச்சு? நான் சொன்னது சரியாப்போச்சா? எல, எத்தன வருஷமா இவனுங்கள பாக்கேன்? செஞ்ச தப்ப திருத்த தெரியாவனுங்க என்னத்த சாதிப்பானுங்க? பவர்பிளே (Powerplay) யில என்ன வெங்காயத்த உரிக்கப்போறோம்னு அத எடுத்தானுவ? இனி, மத்தவனா பாத்து தோத்து கொடுத்தா அடுத்த ரவுண்டுக்குப் போவானுங்க... அப்படி போனாலும் என்ன வெளங்கப்போகுது?"


வங்காளதேசத்தை, தென்னாப்பிரிக்கா ஜெயிக்க, இறுதியாக, கால் இறுதியில், கால் இடறாது, ஓர் இடம் உறுதியாகியது பாரதத்திற்கு.


அங்கே இலங்கையில், இலங்கையோடு ஆஸ்திரேலியா ஆடவேண்டிய ஆட்டம் ஒன்று முன்பு மழையால் தடைபெற்று முடிவு காணாது போனதாலும், பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வென்றுவிட்டிருந்ததாலும், தற்போது Group Bயில் மூன்றாம் இடத்தை அடைகிறது ஆஸ்திரேலியா.


இனி பாக்கி உள்ளது "வெஸ்ட் இண்டீஸ்" உடனான ஆட்டம். இதில் ஜெயித்தால் கால் இறுதியில் ஆஸ்திரேலியாவோடும், தோற்றால் இலங்கையோடும் மோதும் நிலை இந்தியாவுக்கு.


"வெஸ்ட் இண்டீஸை" வென்றது பாரதம்.


இரசிகனின் தலைக்கனம் சற்றும்கூட குறைந்தபாடில்லை. "சாகப்போற வேளயிலே சங்கரா! இதுதாம்லே கடைசி ஜெயம்! அடுத்து ஆஸ்திரேலியாவோட மூக்கு குத்தி தரையில விழப்போறானுவோ! வெளக்கு அணையறதுக்கு முன்னாடி பிரகாசமா எரியும்.. அது போலத்தாம்லே இதுவும்...!" -- என்கிறான் இரசிகன்.


"அழகாய் வெல்லுதல்" - என்பதன் அர்த்தம் உரைப்பதைப்போல் ஆஸ்திரேலியாவை பாரதம் வென்றும் உரைக்கவில்லை நம் இரசிகனுக்கு.


"பாகிஸ்தான் பல்லப் பிடுங்கி அனுப்பின பாம்பத்தாம்லே அடிச்சிருக்கானுவோ? அடுத்து பாம்பாட்டி பாகிஸ்தான் கூடவேல்ல மோதப்போறானுவோ... அப்போ தெரியும்பார்ல... இதுவரைக்கும் உலகக்கோப்பையில பாகிஸ்தான் கிட்டே தோத்ததே இல்லங்கற சரித்திரம் மாறத்தான் போவுது.... கிழியத்தான் போவுது லம்பாடி லுங்கி!"


ஒரு போருக்குண்டான சூழலை உருவாக்குகிறார்கள் மீடியாக்காரர்கள். பாரதத்தின் இதயத்துடிப்பு ஒத்த ஒலியில் ஒத்து ஒலிக்கிறது.


களமிறங்கிய பாரதம் ஆக்ரோஷமாய் வெல்கிறது.


நம் இரசிகன் என்ன ஆனான்? இருக்கிறான்... இன்னும் இருமாப்பு குறையாதே இருக்கிறான். "இப்போது என்ன சொல்கிறாய்?" எனும் கேள்வியை உள்ளடக்கி அம்பாய் பாய்ந்து வரும் பார்வைகளை தன் மந்தகாசப் புன்னகையோடு எதிர்கொண்டான்.


"2003 லயும் இறுதி ஆட்டத்துக்கு வந்தானுவோ! வந்த சுவடு தெரியாம தோத்து போனானுவோ... லங்கா காரன் இதுக்கு முன்ன ரெண்டு தடவ தொடர்ச்சியா இறுதிக்கு வந்திருக்கான்... அவன் லேசுல விடுவானாலே? குருதி சிந்த போராடுவான்! நம்ம ஆட்கலெல்லாம் சுருண்டு தொவண்டு விழப்போறானுவோ... அத்தாம்லே நடக்கப்போவுது....!"

-- என்கிறான் இன்னும் நம்பிக்கையில்லாமல்.


எத்தனை எத்தனை ஆரூடங்கள்....? "1983 காலண்டரும் 2011 காலண்டரும் ஒரே போன்றது.. தேதியும், அதன் நாளும் இரு வருடங்களிலும் ஒத்து வருகிறது..... ஏதேனும் தொடரில் ஒரு ஆட்டம் Tie ஆகியிருந்தால் அந்த தொடரை நாம் தான் வென்றிருக்கிறோம்..... ஸ்ரீசாந்த் இறுதி ஆட்டத்தில் இடம் பெறுவது அணிக்கு அதிர்ஷ்டத்தை தந்திருக்கிறது!" என்றெல்லாம்தான் எத்தனையெத்தனை ஆரூடங்கள்?


இரசிகன்... அர்த்தபுஷ்ட்டியான புன்னகையோடு இந்த ஆரூடங்களை புறந்தள்ளினான்.


ஹேஷ்யங்கள் எல்லாம் ஹாஸ்யம் தான் ஆகப்போகுது என நினைத்துக்கொண்டான்.


இறுதி ஆட்டம்!


டாஸ் தோற்றது பாரதம்!


முதலில் பந்து எறியும் அணி ஒரே முறைதான் வென்றிருக்கிறது. இதோ பாரதம் முதலில் பந்து எறியப்போகிறது! 240 க்குள் இலங்கையை வீழ்த்தினால் வென்றிட சாத்தியம் உண்டு... அதைத்தாண்டி போய்விட்டால் அசாத்தியமாய் ஆடினால் ஒழிய வெல்வது சத்தியமாகக் கடினம்!


இலக்கை, 275 என நிர்ணயித்தது இலங்கை!


துவக்கத்திலேயே பாரதத்தின் வலங்கையையும் (சேவாக்), இடங்கையையும் (சச்சின்) இலங்கை பெயர்த்தெறிய... ஓங்கியது அதன் கை!


தளரவில்லை பாரதம்... தடம்புரளத் தடுமாறவில்லை பாரதம். நாடே பதறி நிற்க, பாரத்தை தன் தோள் ஏற்றி, மட்டை எனும் வாள் சுழற்றி, வீரமாய்... விவேகமாய்... கம்பீரமாய் ஆடுகிறான் கம்பீர்!


எதிரணிக்கு வித்தை காட்டி, நெருக்கடியிலும் உருக்குலையாத விந்தை காட்டி அவனுக்குத் துணை நின்றான் விராத்! ஆயினும் அவன் வீழ, களம் வந்தான் படைத்தலைவன்!


"இன்றேனும் ஆடுவானா? இல்லை ஆட்டம் காணுவானா?" -- கேட்டான் நம் இரசிகன்.


ஆட்டம் காணவில்லை. ஆட்டம் காண்பித்தான்! தன் திறன் யாதும் குன்றிடவில்லை என்று அங்கு அவன் ஸ்தாபித்தான்! நம் இரசிகன் போன்ற ஆட்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்று தன் ஆட்டத்தால் அவன் போதித்தான்.


நீநீநீ...ண்ண்ண்...டடடட, இருபத்தியெட்டு வருடங்களுக்குப் பிறது வென்றது பாரதம்!


எத்தனை கனவுகள்? எத்தனை காலத்து கனவுகள் அன்று நிஜமானது? தன் வாழ்நாளில் இந்த இன்பம் காண முடியுமா என்று ஏங்கித்தவித்த உள்ளங்கள் தான் எத்தனையெத்தனை? எல்லா உள்ளங்களிலும் இப்போது மட்டட்ற‌ மகிழ்ச்சி!


அந்த இரசிகன்.... யாதொன்றும் பேசவில்லை. அவனுக்கு இனி, யாதொன்றும் பேச இல்லை! பேச இருந்தாலும் பேச இயலாத நிலை! ஆனந்தக்கூத்தாடும் தன் தேசத்தவர்க்கிடையே யாரும் கண்டிடக்கூடாதென்று இரகசியமாய்..., விரல்களால் ஒப்பி எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டான் தன் விழியோரத்தில் பூத்திருந்த கண்ணீர் முத்துக்களை!


உண்மைதான்! அது ஆனந்தக் கண்ணீர்தான். அந்த இரசிகனும் பேரானந்தத்தில்தான் ஆழ்ந்திருக்கிறான்.


என்ன செய்வது? மனதின் ஆசைகளும், கனவுகளும் பெரும்பாலும் சுட்டுப் பொசுக்கப்பட்ட அனுபவம் வாய்த்திருக்கும் மனிதர்கள் சிலர், தங்கள் மனதாசைகளை, கனவுகளை, உள்ளபடி வெளிப்படுத்தத் துணிவதில்லை. எதிர்மறையாய் தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்தத் தற்காப்பு (தப்பு) மனிதர்கள் போலத்தான் நம் இரசிகனும்....!


அவன் நம் அணியை அதிகம் நேசிப்பவன். எதிர்பார்ப்பிற்கு இம்மி பிசகினாலும் ஏமாற்றம் கொண்டதாக எண்ணி துயருறும் பாமரன். ஏசித்தான் நேசிக்கத்தெரியும் அவனுக்கு. முன் பின் யோசிக்க மறக்கும், யோசிக்க மறுக்கும், எளிதில் உணர்ச்சிவசப்படும் பரவசக்காரன். கையைப் பிடித்தால் வாயைப் பிளந்திடும் எளிய பலசாலிதான் அவன்! சொல்லப்போனால் நீங்கள் திண்டாடும் அளவுக்கு உண்மையாக உங்களை கொண்டாடுபவனும் அவனே.


அவன் பேச்சு உங்களை துயர் கொள்ளச் செய்திருக்கும், அவனின் கோவம் உங்களை வாட்டம் கொள்ளச் செய்திருக்கும், உங்களை அடிக்கடி எரிச்சல் படுத்தும் அவன் மாறப்போவதில்லை. இனியும் இப்படித்தான் இருப்பான். இனிமேலும் அவனால், அப்படித்தான் இருக்க முடியும். அவன் பேச்சினில் பழுதிருக்கும். அவன் எண்ணத்தில் பழுதுகள் இருப்பதில்லை.


ஆனால், அவன் இனி தன் வாழ்நாள் முழுதும் நீங்கள் பெற்றுத்தந்த இந்த வெற்றியை எண்ணி எண்ணி பூரிப்படைவான். இதைப்பற்றிச் சொல்லி சொல்லி பெருமிதம் காண்பான். அவன் மனம் முழுதும் நன்றியுணர்ச்சி பல்கிப்பெருகி பொங்கி வழிகிறது.


இருப்பினும், நாடே போற்றும் இந்த சரித்திர தருணத்தில், அவன் மீது நீங்கள் வருத்தம் கொண்டிருப்பீர்களேயானால் அவனால் முழு மகிழ்ச்சி காண முடியாது. யதார்த்தத்தில், நீங்கள் பட்ட பாடெல்லாம் அவனை மகிழ்விக்கத்தானே?


ஆகையால், நாடே மகிழ்ந்திருக்கும் இந்த அற்புதமான, புனிதமான தருணத்தில், இந்த இரசிகனை, அவனைப் போன்றவர்களை, இனி பிற்காலத்தில் அவர்கள் உங்களை தூற்றப்போவதற்கும் சேர்த்து...,


மன்னிப்பீர்கள் தானே தோணியாரே?


~இரசிகன்.

April 04, 2011

Comments

Manimaran said…
haaha..... Bawa'ji. Its really very nice and wonderful article.

I already forward to my friends.

Touching and laughing.

Regards,
Manimaran - THRC - 1996
NRIGirl said…
Bawa! That was hilarious. Israel too enjoyed it and asked for a link to forward to his friends.

Congratulations to 'rasigan' for India's win!

Reading about your secret tears brought tears in Israel's eyes also. He was crazy about this World Cup series and was in tears as they won!!
Thanks a bunch for the comments Mani. Thanks bunchooo…. bunch for forwarding it to your friends.

Also, Thanks a bunch Queen… thanks bunchoooo… bunch for Israel also.

I really thought the “touching” part of the article will go unnoticed… but you guys picked it up. I feel so very happy.

“Reading about your secret tears brought tears in Israel's eyes also”

Queen… these lines makes me feel as if I’ve won some kind of an award. Convey my special thanks to Isreatl.

Thanks one more time for the wonderful comments guys! Take care.
Mahaboobb John said…
I am surprise after your long stay in U.S you are still so much of affection in Tamil. Excellent. Keep it up
Mahaboob John
Unlce… I am very happy and excited to get your comment.

எனக்குள்ளது தமிழ் ஆர்வமா... இல்லை ஆர்வத்தால் விளையும் ஆர்வக்கோளாறா என்பது குறித்த சந்தேகங்களும் சர்ச்சைகள் இன்னும் அடங்கியபாடில்லை.

But, I am very happy to get your comments… Thank you Thank you a million times.

Sillvandu (Babu)
NRIGirl said…
Bawa! You have been tagged! Check out my latest post.

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!