வாழ்த்துக்கள் கலாம் சார்! 




லாம் சார்,
வாழ்த்துக்கள்!
ஆமாம்,
வாழ்த்துதான் உரைக்கிறேன்
கலாம் சார், பல்லாயிரம் வாழ்த்துக்கள்!

ப்படியோர் மரணம்
அமையப்பெறுதல் பாக்கியம்!
இதுபோன்ற பாக்கியம்
வாய்க்கப் பெறுவோர் அபூர்வம்!
அபூர்வத்தில் ஒருவராய்
மரணத்திலும் ஆகின்றீர்!
ஆதலால் உரைக்கிறேன்
காலாம் சார், வாழ்த்துக்கள்!

ங்கள்
வாழ்க்கையும் எளிமை!
மரணமும் எளிமை!

ங்கள்
வாழ்க்கையை வியந்துள்ளோம்!
இப்போது
மரணத்தையும் வியக்கின்றோம்!

ரணம் வரை சென்று
மரிக்காது பிழைத்தெழுந்தால்
அவரை,
மரணத்தை வென்றவர் என்று
வையகம் போற்றுவதுண்டு!

து பிழை!

ரணத்தோடு மல்லுக்கட்டாமல்
அதனை அதிகம் நச்சரிக்க விடாமல்
நீங்கள் கொண்ட மரணம் போல!
இயற்கையாய்...
நொடிப்போழுதில் மரித்துப்போனால்

துவும்,
அன்றாட அலுவலுக் கிடையில் - அல்லது
ஆழ்ந்த உறக்கத்தின் மடியில்!
அஃதன்றோ மரணத்தை வெல்லுதல்?

வாழ்வினை வென்ற நீங்கள்
இன்னனம்,
மரணத்தையும் வென்றீர்கள்!
ஆதாலால் சொல்கிறேன்!
கலாம் சார், வாழ்த்துக்கள்!

ண்ணிலிருந்து விண்ணுக்கு
இயந்திர வாணம் செலுத்தியவரே!
இனி
விண்ணிலிருந்து மண்ணுக்கு ஓர்
வாகனம் அமைக்க விழைவீரோ?
அதில்
வானவரை அழைத்து வருவீரோ?

ப்பணியில் அமர்த்தத்தான் உங்களை
இறைவன் அழைத்துச் சென்றாரோ?
ஆயின்
அதற்க்கும் உரைக்கிறேன்
வாழ்த்துக்கள்
கலாம் சார்!
பல்லாயிரம் வாழ்த்துக்கள்!


       --  மாணவன்

Comments

NRIGirl said…
Beautifully written Bawa! Very nice.

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

சாதனை வண்டு!!