Posts

Showing posts with the label ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்!

" க மல் கூட கம்ப்பேர் பண்ணும்போது he is nothing! கமல் ஒரு பிறவிக்கலைஞன். ரஜினி கிறுக்கன். ஏதோ வந்து ஏதோ செஞ்சிட்டு போவான். அவனுக்கு நடிக்கவே தெரியாது!" என்பதுபோன்ற கருத்தையே அதிகம் கூறுவோரிடையே இருந்ததால்தானோ ஏனோ, இதுவே எனக்கும் ரஜினி குறித்தான அபிப்பிராயம் என்றாகிப் போனது. "நீ சின்னப்பையனா இருக்கறப்போ, 'நினைத்தாலே இனிக்கும்' படம் பாத்திட்டு அதுல கமல்ஹாசன் 'என்னடி மீனாட்சீ' பாட்டுக்கு ஆடறதைப்போல நீ எவ்வளோ அழகா ஆடி பாடுவே தெரியுமா?" -- என்று அம்மா அவ்வப்போது என்னிடம் சொல்லக் கேட்டிருந்ததால், கமல்பால் ஓர் ஈடுபாடு எனக்கும் ஏற்பட்டிருந்தது. கமல்ஹாசனை விரும்புதல் ஒரு படி மேல் என்பதுபோலவும், ரஜினியை விரும்புதல் ஒரு படி கீழ் போலவும் ஒரு அபிப்பிராயம் பொதுவாகவே நிலவி வந்தது. ஒரு முறை நண்பர்களோடு தெருவில் விளையாடிக்கொண்டிருக்கையில், ரஜினிகாந்தைப் பற்றி யாரோ ஏதோ ஒரு கமெண்ட் அடிக்க, அப்போது தெருவோடு போய்க்கொண்டிருந்த ஒரு குடிகார வாலிபன் எங்களிடம் வம்புக்கு வந்தான். "ரஜினியப் பத்தி யார்ரா தப்பா பேசினது? மவனே, கொடல உருவி மாலையாப் போட்டிடுவேன் ஜாக்கிரதை" ...