Posts

Showing posts from August, 2015

அந்த காலத்திலே, எங்க காலேஜுலே..!!

Image
M CA Second Year க்ளாஸுக்கு அது தோஷமான காலம் .  பேர் கொஞ்சம் ரிப்பேர் ஆகியிருந்துச்சு .  Why? – இருந்தது சில பல காரணங்கள் . தென்னைமர ஓலையில பீப்பி செய்யறது எத்தனை மகத்தான கலை ? அந்தக்கலையில தேறின ஒருத்தன் ஓலையில   பீப்பீ செஞ்சு காலையிலே க்ளாஸுக்கு கொண்டாந்திருந்தான் . சின்ன வயசுல ஊதினது . எத்தனை காலம் ஆச்சு ? ஆசை ஆசையா அத வாங்கி ஆர்வமா ‘ பீப்பி’க்கிட்டிருந்தோம் . அது ம லர்விழி மேடத்தோட க்ளாஸ் ….! இ ருங்க ! மேம்போக்கா , “ அது மலர்விழி மேடத்தோட க்ளாஸ்” னு சொல்லிட்டு என்னால சும்மா கடந்து போயிட முடியாது . நான் மலர்விழி மேடத்தப்பத்தி கொஞ்சம் சொல்லியாகணும் …! Recent ஆ , நான் பாத்து ரொம்ப ரசிச்ச ஒரு மளையாள சினிமா “PREMAM”. அந்தப் படத்துல ஒரு கதாநாயகி காலேஜ் lecturer . அந்த கதாபாத்திரம் எனக்கு மலர்விழி மேடத்த ஞாபகப்படுத்திடுச்சு . அந்த ஹீரோயின் சிரிக்கறது அப்படியே மலர்விழி மேடம் சிரிக்கறது மாதிரித்தான் இருக்கும் . அதும் , அந்தப் பொண்ணு தலையாட்டுறது அப்படியே மலர்விழி மேடத்தோட மேனரிசம் . same to