நன்றியோடு வண்டு!

னதில் ஒரு பொறி தட்டும். பொறி தட்டுகையில் கரு கிட்டும். கிட்டிய கருவை அணைத்து, மனம் அடை காக்கும். அடைகாக்கப்படும் கருவின் வீரியத்திற்கேற்ப அக்கருவிலிருந்து சிறந்ததாய் கதையோ, கவிதையோ, அல்லது கட்டுரைகளோ உருப்பெறும்.

மனதில் உருப்பெற்றது, எழுதுகையில் உயிர்ப்பெறும். ஆக, எழுதுதல் பிரசவம். சிலருக்கு அது சுகப்பிரசவமாய் அமையும். என்னைப்போல கத்துக்குட்டிகளுக்கோ அது செத்துப் பிழைத்தலுக்குச் சமம். நொந்து பிரசவிக்கும் குழந்தைமேல் பாசம் பொங்கும். அது பேரும் புகழும் பெறவேணும் என பெற்ற மனம் ஏங்கும்.

ஒவ்வோர் படைப்பும் ஒரு குழந்தையே!

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்"

இந்தத் தாயின் மனநிலை போன்றுதான் இருக்கும், தன் படைப்புக்கோர் நல்ல பாராட்டு கிடைக்கையில் உவகைக்குள்ளாகும் அதைப் படைத்தவனின் உள்ளமும்.

நல்ல "பாராட்டு" எது? என்பதில் தெளிவு வேண்டும். ஆழ்ந்து படிக்காது "அருமை" என்பர் சிலர், சிலபல வேற்று காரணங்களுக்காக "கொடுமை" என்பவரும் உளர். தரம் பிரிக்கத் தெரிய வேண்டும். வரிக்கு வரி அலசி ஆராய்ந்து செய்யப்படும் விமர்சனம் பெரும் வரம். ஏனென்றால் அது எளிதில் கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட அது அமுதம், ஏனென்றால் பலப்போதும் அது கிடைப்பதே இல்லை!

சிறப்பினைப் பாராட்டியும், குறையினைச் சுட்டிக்காட்டியும் வரும் விமர்சனமே உன்னதம். எழுத்தில்தான் வரவேணும் என்பதில்லை, சிலரின் முகபாவம் கூட விமர்சனம் தரும். புன்னகைக்கும் அளவு, புருவத்தை நெளிக்கும் விதம், படிக்கும்போது படிப்பவர் காட்டும் உடல் அசைவுகள், இதிலிருந்தெல்லாம் கூட விமர்சனம் பெறலாம்.

"இப்போ எதுக்காக இந்த மாடு தன் வாலைத் தூக்குது?" என்று நீங்கள் யோசிக்கக்கூடும்.

"புரிகிறது! இவன் எழுதுவதற்கெல்லாம் நாம் விமர்சனங்களை அனுப்பவேணும் என்கிறான். அதுதான் விஷயம்?" என்றும் நீங்கள் கருதக்கூடும்.

விமர்சனம் எதிர்பார்ப்பது இயல்புதான். அதில் மறைக்க ஏதுமில்லை. ஆனால், இந்தக் கட்டுரைக்கான நோக்கம் அதுவல்ல.

எதிர்பாராத ஒருவரிடமிருந்து எனக்குச் சில பாராட்டுக்கள் என் பதிவு ஒன்றிற்கான Comments வழி வந்தது. அந்த மகிழ்வினைப் பகிர்ந்து நன்றியினை அவருக்கு உரித்தாக்குவதே இப்பதிவின் நோக்கம்.

அவரது Comments க்கு நான் இரசிகன். என் தோழி Quessn Star ன் blog-ல் நான் முதலில் தேடுவது இவரது Comments ஐத்தான். அவரது Comments சினைப் படித்தபிறகுதான் நான் தோழியின் Post-டினை படிக்கத்துவங்குவேன் என்பது மிகைப்படுத்துதல் அல்ல உண்மையான உண்மை.

என் தோழி Queenstar [NRI Girl] ன் தாயார்தான் அவர். சிலர், நம் எழுத்துக்களை படிப்பதே நமக்கு பெரு மகிழ்ச்சியை அளிக்கும். அதிலும், அவர் அதைப் படித்துவிட்டு பாராட்டவும் செய்தால்? எனக்கு ஆனதுபோலத்தான் ஆகும். தலைகால் புரியாது!

தோழியின், NRI Gril - blog வழியேதான் அம்மா எனக்குப் பரிச்சியம்.

ஒரு Post ல் [ Conversations - Between Me and My Mom ], தன் அம்மாவிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தாள் என் தோழி. அதில் ஒரு கேள்வியும் அதற்கான அம்மாவின் பதிலும் என்னை ஆழ்ந்து இரசிக்க வைத்தது.

கேள்வி: When did you realize you were no longer a child?

பதில்: Only in my sixties. that too I am not sure.

இது ஒரு சாதாரண பதில் போலத்தோன்றினாலும், இதில் தத்துவம் உண்டு, மனதிற்கு வயது இல்லை என்பது தத்துவம். வாழ்வியல் உண்டு, குழந்தைகளூக்குண்டான இயல்புகளை, கள்ளம் கபடமற்ற தூய உள்ளம், தீமை அறியாத நல்ல எண்ணம், இன்னல் இல்லாத இன்ப நிலை, இவையாவும் கொண்டிருக்கும் நிலையில் வாழ்வை அமைக்கவேண்டும் என்பது வாழ்வியல். மேம்போக்காக பார்க்கையில் ஹாஸ்யம். என இது ஒரு ஆழமான பதில் என்றே எனக்குத் தோன்றியது.

இதற்குப்பிறகு இன்னொரு பதிவு, "Tirunelveli Junction". இது என் மனதை மிகவும் நெகிழவைத்த பதிவு. ஒரு இனிய பயணம்போல அமைந்திருக்கும் இப்பதிவினைப் படித்து முடித்து அதைத் தொடர்ந்து அம்மாவின் Comment ஐ படித்தால், அங்கிருந்து மற்றொரு இதமான பயணம் துவங்கும். இதற்குப் பிறகுதான், நான் முதலில் அம்மாவின் Comment ஐ படிப்பதை வழக்கமாகக் கொண்டேன்.

மூன்று பிளைகளுக்குத் தாயாய் இருப்பவள், தன் தாய் முன்னே குழந்தையாவதும், அந்தத்தாய் தன் பிள்ளையின் தாய்மையைப் போற்றுவதும் என இவர்கள் இருவரும் பரிமாறிக்கொள்ளும் அன்புப் பரிவர்த்தனை, அழகில் தோய்த்தெடுத்த அருமைக் காவியம். இது, வரும் தலைமுறையும், வளரும் தலைமுறையும் தவறவிடாமல் காப்பாற்றவேண்டிய ஒன்றும்கூட!

இப்படி நான் அம்மாவின் Comments களுக்கு இரசிகனாய் இருக்க, நான் எழுதிய "மீண்டும் ஒரு ஜூன் 30" எனும் கட்டுரைக்கு அம்மாவின் Comments கிடைக்கப் பெற்றதும் மகிழ்ந்தேன்.

மகிழ்ந்தேன் என்பது சரியான வார்த்தையன்று. ஏதோ, என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் அதுவென்றே உணர்ந்தேன். வெறும், "நன்றி" என்று ஒற்றை வார்த்தையில் பதில் உரைப்பது சரியன்று, வேறு ஏதேனும் வழியில் நன்றியையும் மகிழ்ச்சியினையும் தெரிவிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான், அம்மாவின் பிறந்தநாள் வருகிறதென்பதை Queen தெரிவித்தாள்.

என் பிறந்த நாள் அன்று, நான் எழுதிப்பதிவு செய்த ஓர் கட்டுரைக்கு, பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து என்னை பெருமைக்குள்ளாக்கிய அம்மாவுக்கு, அவர்களின் பிறந்தநாளன்று என் வாழ்த்தையும், நன்றியையும் தெரிவிக்கும்படி அமைவதே மிகப் பொருத்தமாக இருக்கும் எனத்தோன்றவே... இதுவரை அமைதிகாத்து, இந்தப் பதிவு வழியே என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி அம்மா. உங்கள் வாழ்த்தும், பாராட்டும் என் பெருமை. நான் முன்பே கூறியதுபோல இது எனக்குக் கிடைத்த விருது.

Wish you a very Happy Happy Birthday.

Comments

YL said…
Dear Bawa
I am overwhelmed with your loving wishes. You have honoured me in your post.Thank you very much and may our Almighty God bless you much.
I have read your writings even when you were a student in Rover and also I read your blog posts a few months back.
your tribute to your grandfather and father was really great and I thought the role played by your mother was great.
Wishing you all the best
YL.
YL said…
Why such a long time for a new post?

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?