Friday, January 2, 2009

புத்தாண்டு வாழ்த்து!


பழைய வருடங்கள் போதித்த பாடங்கள்
புதிய வருடத்தில் பண்பெற வழிகாட்டி!

பழைய வருடத்தில் ஏமாற்றம் வலித்திருக்கும்
புதிய வருடத்தில் [வலியுறா] பக்குவம் வளர்!

பழைய வருடத்தின் மகிழ்ச்சியின் தருணத்தை
புதிய வருடத்தின் துயர் நேர மருந்தாக்கு!

பழைய வருடத்தில் நண்மைகள் புரிந்தாய்
புதிய வருடத்தில் பழக்க மென்றாக்கு!

பழைய வருடத்தில் தீதும் செய்தாய்
புதிய வருடத்தில் தொடராது தவிர்!

பழைய வருடத்தில் தவறுகள் நேர்ந்தது
புதிய வருடத்தில் எண்ணிக்கை குறை!

பழைய வருடத்தின் வேண்டாத கசப்புகள்
புதிய வருடத்தில் காணாமல் செய்!

பழைய வருடத்தில் தோல்விகள் கண்டாய்
புதிய வருடத்தில் பயில் முயல்!

பழைய வருடத்தின் வெற்றிகள் பற்றி
பஞ்சாங்கம் பாடாது எண்ணிக்கை கூட்டு!

பழைய வருடத்தின் நிறைவேறா கனவு
புதுவர்ணம் பூசி புதிதாக காண்!

பழைய வருடத்தின் தன்னம்பிக்கை எல்லாம்
புதிய வருடத்தில் பன்மடங்காக்கு!

பழங்காலம் தந்த நட்புகள் சிறந்தவை
காலம் உண்டாக்கும் உறவுகள் உயர்ந்தவை
எக்காலாத்தும் இதனை பேணி நீ காத்திடு!

கசப்பான வாழ்விலும் மாறாத புன்னகை
தன் நிலை பாராது உதவிக்கு ஒரு கை!
புது வருடத்தின் கொள்கையாய்
இவற்றினை கடைபிடி!

அனைவருக்கும் சில்வண்டின்,

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

1 comments:

Maran's said...

Bawaji!

Wish You and Your a
Very
Happy New Year 2010

Regards,
Manimaran
19 Jan 2010 18:52