Posts

Showing posts from 2006

பெண்னொன்று கண்டேன்!

ஒ ரு டீ அடிக்கலாமா? இல்லை இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாமா? இந்த யோசனையோடுதான் பதினைந்து நிமிடங்களாய் காத்திருக்கிறேன். 4.35-க்கு வரவேண்டிய டவுன்பஸ் இன்னும் வரவில்லை. எப்போது வேண்டுமானாலும் வதுவிடும் எனக் காத்திருக்கத் துவங்கி நாற்பது நிமிடமாயிற்று. சரி வரும்போது வரட்டும் என அருகிலிருந்த டீ கடையில் ஒரு டீ சொன்னேன். ஒரு டீ என கடைக்காரன் தந்த டம்ளரில் இருந்ததென்னவோ பாதி டீ தான். "தேநீர்" என்று பார்த்தால் முக்கால் என்று சொல்லலாம். "தே" இல்லை சூடாய் 'நீர்' மட்டும் தான் அதிலிருந்தது. பாதி குடித்து முடிந்தபோது புழுதியை கிளப்பிக்கொண்டு வந்துசேர்ந்தது அதுவரை வராத டவுன்பஸ். நிறுத்தத்தில் நிறுத்தப்படாமல் வேறெங்கோ சென்று நின்ற பேருந்தை நோக்கி ஒரு கூட்டமே ஒடியது. டீக்கான காசையும் கிளாசையும் குடுத்துவிட்டு நானும் ஓடினேன். இரு படிக்கட்டுகளிலும் கூட்டம் முட்டிக்கொண்டும் முண்டியடித்துக்கொண்டும் நின்றிருந்தது. பின்படிக்கட்டைவிட முன்படிக்கட்டு 'கட்டாக' இருந்தது. காரணம், அதன் அருகே நின்றிருந்ததில் பெரும்பாலும் 'சிட்டாக' இருந்தது. இரண்டு நுழைவாயில்களைக் கொண்ட இ

மகர நிலா

ம ல்லிகை மாலை இட்டு மா விலைத் தோரணம் கட்டி மி ன்னல் ஒன்றை வீணையாக்கி மீ ட்டிவிடும் ஆசை கொண்டேன் - அவள் மு கத்தினில் அமைதி கண்டேன் மூ ன்றாம்பிறை அழகும் கண்டேன் மெ ய்மறந்து ரசிக்கும்போது - என் மே னி கொஞ்சம் சிலிர்க்கக் கண்டேன்! மை யிட்ட விழிகள் சொல்லும் மொ ழியில் ஏன் பதில்கள் இல்லை? மோ கம் கொண்ட என்னை மெள னத்தால் கொல்லாமல் 'ம்' என்று சொல் பெண்ணே!

அவ்விருக் குறும்பர்!

[ தேன்கூடு.காம் -- சிறுகதை போட்டியில் தரப்பட்ட "குறும்பு" எனும் தலைப்புக்கு எழுதப்பட்ட கதை. குறும்பு எனும் தலைப்புக்கு ஏன் சீரியஸா ஒரு கதை எழுதக்கூடாது என முயன்று எழுதிய கதைக்கு நடுவர்கள் சீரியஸா பரிசு இல்லை நு சொல்லி குறும்பு பண்ணிட்டாங்க ;-) ] வெட்கம்! அப்படி ஒரு வெட்கம். இனம் புரியாத வெட்கம் எனக்குள்! எப்படி நான் அவளை பார்ப்பேன்? எப்படி அவளோடு பேசுவேன்? யோசிக்க யோசிக்க எனக்குள் வெட்கம் கூடி கூடி வந்தது. யாரும் என்னிடம் விஷயம் என்ன என்று நேரடியாக சொல்லவில்லை. எனக்கும் முழுதாக புரியவும் இல்லை. அரை குறையாகத்தான் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. ஆனாலும் ஏனோ வெட்கம் என்னை சூழ்ந்துகொண்டது. இப்போது வெட்கப்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு வயது பதினைந்து. பிளஸ் ஒன் பரீட்சை எழுதியிருக்கிறேன். அடுத்து பிளஸ் டூ! வழக்கமாக எல்லா விடுமுறைக்கும் ஊருக்கு போவதுண்டு தான். ஆனால், அடுத்தவருடம் பிளஸ் டூ பாருங்கள், ஆகையினால் இம்முறை ஊருக்கு போகவேண்டாம் என்று கூறிவிட்டார் அப்பா. ஆனாலும் இப்போது அம்மாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு போயிக்கொண்டிருக்கிறேன், ஏகப்பட்ட வெட்கத்துடன். காரணம், நேற்று அத்தையிடமி
அனைவருக்கும் என் வணக்கம்!