அனைவருக்கும் என் வணக்கம்!
அவ்விருக் குறும்பர்!
[ தேன்கூடு.காம் -- சிறுகதை போட்டியில் தரப்பட்ட "குறும்பு" எனும் தலைப்புக்கு எழுதப்பட்ட கதை. குறும்பு எனும் தலைப்புக்கு ஏன் சீரியஸா ஒரு கதை எழுதக்கூடாது என முயன்று எழுதிய கதைக்கு நடுவர்கள் சீரியஸா பரிசு இல்லை நு சொல்லி குறும்பு பண்ணிட்டாங்க ;-) ] வெட்கம்! அப்படி ஒரு வெட்கம். இனம் புரியாத வெட்கம் எனக்குள்! எப்படி நான் அவளை பார்ப்பேன்? எப்படி அவளோடு பேசுவேன்? யோசிக்க யோசிக்க எனக்குள் வெட்கம் கூடி கூடி வந்தது. யாரும் என்னிடம் விஷயம் என்ன என்று நேரடியாக சொல்லவில்லை. எனக்கும் முழுதாக புரியவும் இல்லை. அரை குறையாகத்தான் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. ஆனாலும் ஏனோ வெட்கம் என்னை சூழ்ந்துகொண்டது. இப்போது வெட்கப்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு வயது பதினைந்து. பிளஸ் ஒன் பரீட்சை எழுதியிருக்கிறேன். அடுத்து பிளஸ் டூ! வழக்கமாக எல்லா விடுமுறைக்கும் ஊருக்கு போவதுண்டு தான். ஆனால், அடுத்தவருடம் பிளஸ் டூ பாருங்கள், ஆகையினால் இம்முறை ஊருக்கு போகவேண்டாம் என்று கூறிவிட்டார் அப்பா. ஆனாலும் இப்போது அம்மாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு போயிக்கொண்டிருக்கிறேன், ஏகப்பட்ட வெட்கத்துடன். காரணம், நேற்று அத்தையிடமி...
Comments