Posts

Showing posts from 2018

சாதனை வண்டு!!

Image
==================================================== வா ர சாமன்கள் வாங்க இண்டியன் ஸ்டோருக்கு போனேன் . ரம்ஜான் ஸ்பெஷல் என்று நாலாபுறமும் கவர்ந்திழுக்கும் சாதனங்களை இறைத்து வைத்திருந்தார்கள். ஒரு பக்கம் குலோப்ஜாமுன் கொஞ்சிக் குழாவுது . மறுபக்கம் காஜூ கட்லி ஆளைக்கவ்வுது. ஜிலேபி டப்பா “ ஹேவ் மீ பேபி.. ப்ளீஸ்…!” என்குது . அருகிலிருக்கும் லட்டு வோ லவ் டார்ச்சர் கொடுக்குது .  இது போறாதுன்னு, “ ரா .. ரா .. சரசுக்கு ரா .. ரா ... ” என்று பாடி அழைக்குது ரசகுல்லா !  மனதை கல்லாக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தால் , எதிரே விதவிதமான 🍦 ஐஸ்கிரீம் , " ஓம் க்ரீம் ... க்ளீம் " என மந்திரம் போட்டு என்னை மயக்கப்பாக்குது !  விலகி ஓடினேன் .  மசாலா கடலை கையை பிடித்து இழுக்க, வாழைக்காய் சிப்ஸ் கிஸ் கேட்டு துரத்த, ஓமப்பொடி மோகப்பார்வை வீச, மிச்சர் ரப்சர் பண்ண, மீண்டும் விலகி ஓடி ஓரிடத்தில் ஒதுங்கி கண்கள் மூடி மூச்சு வாங்கும்போது ஏதோ ஒன்று என்னைத் தொடுவதாய் உணர்ந்து கண் திறந்து பார்த்தால் ..., கண்ணடித்து 👄 உத

நெஞ்சாக்கூட்டில்..., [ ஒரு வட கத ! ]

அ து   ஒரு வார இறுதி . அதிகாலையிலிருந்தே மழை பெய்துகொண்டிருக்க , மெல்லிய காற்றும் சில்லென வீசிக்கொண்டிருக்க , மழைநாளின் சோம்பலை , இழுத்துப்போர்த்திய பெட்ஷீட் தரும் கதகதப்போடு இதமாக அனுபவித்துக்கொண்டிருந்தோம் நானும் என் நண்பர்களும் . இடம் : அமெரிக்கா . பொருள் : அதை ஈட்டத்தான் நாடு விட்டு கடல் தாண்டி வந்துள்ளோம் . ஏவல் : அதை எங்கள் மேனேஜர்கள் சரியாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் . இடம் தவிர , பொருளும் ஏவலும் இந்தக்கதைக்கு தேவையில்லை . இந்தக்கதை அமெரிக்காவில் நடக்கிறது என்பதை வித்தியாசமாக சொல்ல நினைத்த ஆர்வக்கோளாறு என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு வேண்டுமென்றால் என்னை முறைத்துக்கொண்டு மேலே தொடருங்கள் ….! “ சூடா ஒரு டீ அடிச்சா சூப்பரா இருக்கும்ல ?” -- என்று ஒருவன் சாதாரணமாக உதிர்த்த அந்தக் கேள்வி வாக்கியம்தான் அன்றைய மாலைப்பொழுதை ரணகளமாக்கப்போகிறது என்று அப்போது நாங்கள் உணர்ந்திருக்கவில்லை ….! “ டீ கூட சூடா ஏதாவது கடிச்சுக்க இருதா இன்னும் சூப்பரா இருக்கும்ல ?” -- என்று வேறு ஒருவன் தீ