Posts

Showing posts from July, 2015
Image
   வாழ்த்துக்கள்  கலாம் சார்!  க லாம் சார், வாழ்த்துக்கள்! ஆமாம், வாழ்த்துதான் உரைக்கிறேன் கலாம் சார், பல்லாயிரம் வாழ்த்துக்கள்! இ ப்படியோர் மரணம் அமையப்பெறுதல் பாக்கியம்! இதுபோன்ற பாக்கியம் வாய்க்கப் பெறுவோர் அபூர்வம்! அபூர்வத்தில் ஒருவராய் மரணத்திலும் ஆகின்றீர்! ஆதலால் உரைக்கிறேன் காலாம் சார், வாழ்த்துக்கள்! உ ங்கள் வாழ்க்கையும் எளிமை! மரணமும் எளிமை! உ ங்கள் வாழ்க்கையை வியந்துள்ளோம்! இப்போது மரணத்தையும் வியக்கின்றோம்! ம ரணம் வரை சென்று மரிக்காது பிழைத்தெழுந்தால் அவரை, மரணத்தை வென்றவர் என்று வையகம் போற்றுவதுண்டு! அ து பிழை! ம ரணத்தோடு மல்லுக்கட்டாமல் அதனை அதிகம் நச்சரிக்க விடாமல் நீங்கள் கொண்ட மரணம் போல! இயற்கையாய்... நொடிப்போழுதில் மரித்துப்போனால் அ துவும், அன்றாட அலுவலுக் கிடையில் - அல்லது ஆழ்ந்த உறக்கத்தின் மடியில்! அஃதன்றோ மரணத்தை வெல்லுதல்? வா ழ்வினை வென்ற நீங்கள் இன்னனம், மரணத்தையும் வென்றீர்கள்! ஆதாலால் சொல்கிறேன்! கலாம் சார், வாழ்த்துக்கள்! ம ண்ணிலிருந்து விண்ணுக்கு