பதினாற்றுச்சோலையின் குறிஞ்சிப்பூ!
வ ந்ததிலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன். அவளைக்காணவில்லை. அக்காவிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. அவள் சைக்கிள் இருக்கிறதா எனப்பார்த்து அவள் வந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என நினைத்து வெளியே வந்திடக் கதவு திறந்தால் என் எதிரே தரிசனம் தந்து நிற்கிறாள் சிவரஞ்சனி. அன்றுதான் முதன் முதலாய் அவளைப் பார்ப்பதுபோல் எனக்குள் ஒரு ஜில்! பொங்கல் புத்தாடையாய் பட்டுப்பாவாடை சட்டை அணிந்து அன்று அவள் நின்றிருந்த கோலம் இன்றுவரை என் நினைவில் பளிச்! எப்போதும் இவள் அழகுதான் என்றாலும் இன்றைக்கு ஒரு பிரத்யேக அழகோடு காட்சி தருகிறாள். ஏதேது? அழகிடமிருந்து பொங்கல் போனஸ் ஏதும் பெற்றாளோ!? அவளது அழகில் மிளிர்கிறது பண்டிகைப்பொலிவு! அடர் நீலத்தில் பட்டுப்பாவாடை, ஆகாய நீலத்தில் பட்டுச்சட்டை, கை நிறைய கண்ணாடி வளையல், தலையாட்டிப்பேசும் அவள் இயல்புக்கு ஈடுகொடுத்து தனித்தாடும் புது ஜுமிக்கி, ஒளிக்கீற்றை உள்வாங்கி மின்னல்கீற்றாய் எதிரொளிக்கும் ஒற்றைக்கல் மூக்குத்தி, தலை நிறைய அவள் சூடியிருக்கும் மல்லிகைப்பூ! என அவள் அணிந்திருந்த அனைத்தும் அவளால் அழகு பெற்றுக்கொண்டிருந்தது. என் சுவாசத்தில் அவள் வாச