Posts

Showing posts from 2013

யவன 'பூ'

Image
ஆ காசவாணி ஒலிபரப்புகள் துவங்குவதற்கு முன்னமே துயிலெழுந்திடுவாள் அம்மா. வானொலி அம்மாவின் காலைநேரத் தோழி! வானொலி ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும் அம்மாவின் அடுக்களை வேலைகள் இலகுவாய் நடந்திட. இன்றுவரையில் என் அம்மா 'ஆல் இந்தியா ரேடியோ' வின் தீவிர நேயர்! உறக்கம் எழுந்ததுமே உற்சாகமாகிவிடுவது அம்மாவின் வழக்கம். ஒரு நிமிடம் கூட சோம்பல் கொண்டோ, அரைத்தூக்கத்தை அனுபவித்தோ என் அம்மா உட்கார்ந்து நான் இதுவரையில் பார்த்ததில்லை. அவளுக்கென்று எப்படி ஒரு வேலை வந்து சேரும் என்பதும் புதிர்தான். ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்துகொண்டிருப்பாள்! இப்படிப்பட்ட ஓர் அன்னையின் செல்ல மகன் நான். ஆனால், அம்மாவின் இந்த அற்புத குணம் எள் அளவு கூட எனக்குக் கிடைத்திருக்கவில்லை. நான் சோம்பலில் சுகம் காணும் கழுதை. அதுவும், லீவு நாட்களில் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்திருக்கிறேன் என்றால் நான் கொள்ளும் சோம்பலுக்கு வரம்பும் இருக்காது, வரைமுறையும் இருக்காது. "என் செல்லப்பிள்ளே! நேரமாச்சு பாரு எழுந்திருப்பா…!" என்று மென்மையாகத்தான் துவங்கும் என்னைத் துயிலெழுப்ப அம்மா பாடும் சுப்ரபாதம்.