Posts

வானவில் பூக்கள்!

Image
இது வானவில் பூக்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம்!    வானவில்போல திடீரெனத் தோன்றி, எழில் வர்ணம் காட்டி, இதயத்தை வருடி, இரசனையைத் தூண்டி, இரசிக்கும்போதே மாய்ந்துபோனதால் இவை, வானவில் பூக்கள்!   வண்டின் கரம் பிடித்து உடன் வாருங்கள்! வாசம் வீசும் அந்த சோலைக்குள் ஓர் உலா போய் வரலாம்! அங்கே ஒரு ‘பூ’ உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கு, உங்களை வரவேற்கும் ஆர்வத்தால் பூத்திருக்கு….!          ======================================= சில்வண்டின், வானவில் பூக்கள் !                                          [ சங்கமி  ‘ பூ ’]   ======================================= டி ரிங்ங்ங்! டிரிங்ங்! வழக்கமா அலறும் தொலைபேசி அன்னிக்கு அதிசயமா சிணுங்குது. எடுத்தேன். " ஹலோ?"    ' ஹல்ல்ல்லோ!"                 -  ங்குது ஒரு பெண்குரல். அந்தக் குரல் எனக்கு பழக்கப்பட்ட குரல்தான். அதனால ...