ஆடிய ஆட்டமென்ன?
ச மாதானம் கொள்வோம்! யானைக்கும் அடி சறுக்கும்! நம் யானைக்கோ அடிக்கு ஒரு முறை சறுக்குகிறது. நம்பிக்கை கொள்வோம்! பெர்முடா பங்களாதேஷை தோற்கடித்து நம்மை சூப்பர் 8 க்கு அனுப்பும் என்று நம்பிக்கை கொள்வோம்! அப்படி மட்டும் நடந்துவிட்டால் பெர்முடாவின் அந்த குண்டு ஆட்டக்காரரை சச்சினை விட அதிகமாக நேசிப்போம் என உறுதி கொள்வோம்! ஆதங்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தோல்வி நல்லதுக்கே என்றே எண்ணத்தோன்றுகிறது. "அளவு" கடந்த விஷயங்கள் என்றைக்கும் அபாயகரமானது. கிரிகெட் சம்மந்தப்பட்ட எல்லா விஷயங்களும் அளவு கடந்து தான் போய்க்கொண்டிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. இந்த தோல்வி அனைத்தையும் சரிகட்டி எல்லாவற்றையும் அளவுக்குள் கொண்டுவரும். கிரிக்கெட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு விளம்பரத்திலும் மற்று பலதிலும் பணம் முதலீடு செய்யும் பல கம்பெனிகளுக்கு இது ஒரு பாடம். தறி கெட்டு வெறியோடு இந்த விளையாட்டை அனுகும் ரசிகர்களுக்கும் இந்த தோல்வி தேவையான ஒன்றுதான். ஒரு விதத்தில் இந்த தோல்விக்கு காரணமே இத்தகைய ரசிகர்கள் தான் என்பதும் உண்மையே! நன் அணியின் எதிர்காலத்துக்கு இந்த தோல்வி நன்மையே செய்யும். "திறமைக்கு ...