!!!DREAM GIRL!!!
என் DREAM GIRL!!! யார் அவள்? எப்படி இருப்பாள்? பேரழகு இல்லை அவள் களை மிகுந்த முகத்தவள் மஞ்சள் அழகியல்ல மா நிறத்தில் ஜொலிப்பவள்! இடி மழை மின்னலுக்கு கரப்பான் பூச்சிக்கு பயந்தலறும் பெண் ஆவாள்! எதிர்பாரா நேரத்தில் மாபெரும் பிரச்சினையில் தைரியம் காட்டி அசரவும் வைப்பாள்! என் சின்ன கொஞ்சல் மொழிக்கு கூட வெட்கம் தாளாது துவளும் பெண்! சில நேரத்தில் கொஞ்சலில் கெஞ்சலில் என்னையும் மிஞ்சும் பெண்! "என்னமோ தெரியல அழுகைய வருது" - என என் மார்பில் சாய்ந்து குழந்தை போல் அழுவாள்! நான் தளர்ந்து போனேன் என்றால் - என் கை பற்றி கண் நோக்கி அணைத்தெனக்கு ஆறுதல் தருவாள்! காரணம் இன்றி கோபிப்பாள் - பின் மன்னிக்கவேண்டி பின்னே அலைவாள்! கோபிப்பது நான் என்றானால் சமரசம் கொள்ள சம்மதிக்காதிருப்பாள்! அவள் அமைதியானவள்! - பத்து வாயில் பேசும் வாயாடியும் அவள்! இசையில் லயிப்பவள் என் உள்ளத்தில் இசையாய் இருப்பவள்! சாந்த சொரூபி படபடக்கும் பத்திரகாளி! ரசிகை ராட்க்ஷசி! தேவதை தாரகை குயில் மயில் - என் குட்டி குரங்கு செல்லக் கழுதை என எல்லாமும் ஆனவள்! ஒவ்வொரு செய்கையிலும் அன்பை பொழிபவள்! ஸ்நேகம் ஸ்நேகம் ஸ்நேகம் எனை ஸ்நேகத்தில் க...