மன்னிப்பீரா தோணியாரே?
"மொத மேட்ச் வங்காளதேசம் கூடவா? போன தடவ நம்மள வீட்டுக்கு அனுப்பி வச்சானுவோ! இப்ப என்னத்த பண்ணப்போறானுவளோ என்ன எழவோ?"
-- நம்பிக்கையில்லாமல் பேசினான் இரசிகன்.
வங்கத்தை வென்றது பாரதம். அடுத்து இங்கிலாந்து!
"ஆஷஷ் (Ashes) ல ஆஸ்திரேலியாவுக்கே தண்ணிய காட்டிட்டு வந்திருக்கானுவோ... இன்னைக்கு வெளுக்கும், நம்ம ஆட்களோட நீலச்சாயம்!"
-- கொக்கரித்தான் இரசிகன்.
ஆட்டம் சம நிலையைக் (Tie) கண்டது!
"சொன்னோம்லா... இங்கிலாந்து காரன் கடைசில ரிஸ்க் எடுக்காம ஒரு ரன் போதும்னு நிறுத்தினதுனால பொழச்சது இந்தியா. இல்லாட்டி தோத்திருப்பாணுவோ... ஆட்டம் tie ஆனது இங்கிலாந்துகாரன் போட்ட பிச்சை! பெரிய டீமுன்னு சொல்லுவானுவோ... 29 ரன்னுக்கு எல்லா விக்கட்டையும் கொடுத்திட்டு வந்து நிப்பானுவோ.... இதுதான் பவர்பிளே ல இவனுங்க கிழிச்சது...!"
-- அட்டகசித்தான் இரசிகன்.
அடுத்து அயர்லாந்தும், நெதர்லாண்டும்..! எதிர்பார்த்ததுபோல அப்படியொன்றும் அனாயாசமாக ஜெயித்திடவில்லை பாரதம், கண்ட ஜெயத்தில் ஆங்காங்கே கொஞ்சம் திணறல் தென்படத்தான் செய்திட்டது.
"அவ்வளவுதாம்லே....! இந்த சின...