பெண்னொன்று கண்டேன்!
ஒ ரு டீ அடிக்கலாமா? இல்லை இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாமா? இந்த யோசனையோடுதான் பதினைந்து நிமிடங்களாய் காத்திருக்கிறேன். 4.35-க்கு வரவேண்டிய டவுன்பஸ் இன்னும் வரவில்லை. எப்போது வேண்டுமானாலும் வதுவிடும் எனக் காத்திருக்கத் துவங்கி நாற்பது நிமிடமாயிற்று. சரி வரும்போது வரட்டும் என அருகிலிருந்த டீ கடையில் ஒரு டீ சொன்னேன். ஒரு டீ என கடைக்காரன் தந்த டம்ளரில் இருந்ததென்னவோ பாதி டீ தான். "தேநீர்" என்று பார்த்தால் முக்கால் என்று சொல்லலாம். "தே" இல்லை சூடாய் 'நீர்' மட்டும் தான் அதிலிருந்தது. பாதி குடித்து முடிந்தபோது புழுதியை கிளப்பிக்கொண்டு வந்துசேர்ந்தது அதுவரை வராத டவுன்பஸ். நிறுத்தத்தில் நிறுத்தப்படாமல் வேறெங்கோ சென்று நின்ற பேருந்தை நோக்கி ஒரு கூட்டமே ஒடியது. டீக்கான காசையும் கிளாசையும் குடுத்துவிட்டு நானும் ஓடினேன். இரு படிக்கட்டுகளிலும் கூட்டம் முட்டிக்கொண்டும் முண்டியடித்துக்கொண்டும் நின்றிருந்தது. பின்படிக்கட்டைவிட முன்படிக்கட்டு 'கட்டாக' இருந்தது. காரணம், அதன் அருகே நின்றிருந்ததில் பெரும்பாலும் 'சிட்டாக' இருந்தது. இரண்டு நுழைவாயில்களைக் கொண்ட இ...